சுருவில் மக்கள் மன்றம்- கனடா

சுருவில் என்னும் கடலோரக் கிராமம், யாழ்ப்பாணத்தில் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் அமைந்துள்ளது. சிறிய கிராமமாக இருந்தாலும், பணம் புரளும் அழகிய ஊர் இது.

“கொழும்பு சீனி முதலாளிகள்” என்று பெருமையோடு அழைக்கப்பட்ட அமரர்கள் திருவாளர்கள் சுப்பிரமணியம், சண்முகம் ஆகியோரும், இன்னும் பல தென்னிலங்கை வ ர்த்தகர்களும் சுருவில் கிராமத்தைச் சார்ந்தவர்களே!

இந்த சுருவில் ஊரைச் சேர்ந்தவர்களான கனடா வாழ் பெருமக்கள் இணைந்து ஆரம்பிக்கப்பட்டதே “சுருவில் மக்கள் மன்றம்- கனடா” ஆகும்.

அதன் வருடாந்த குளிர்கால ஒன்றுகூடல் நேற்று மாலை மார்க்கம் நகரில் உள்ள ஜே ஜே சுவாஹட் மண்டபத்தில் சிறபபாக நடைபெற்றது.

சிறுவர்களுக்கான பல நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகியனவும் போட்;டி நிகழ்சசிகளும் சிறபபாக முறையில் ஏற்பாடு செயயப்படடிருந்தன.

மன்றத்தின் அங்கத்தவர்கள் பலரல் இந்த ஒன்றுகூடலை சிறப்பான நடத்த கடுமையான உழைத்திருந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

திருமதிகள் மகா மார்க்கண்டு, வீரசிங்கம் அத்தை ஆகியோரின் 80வது பிறந்த நாளை முன்னிட்டு “கேக்”வெட்டும் வைபவமும் இடம் பெற்றது.