சுதந்­திர தின நிகழ்வை ஏன் புறக்­க­ணித்தேன்?

விளக்­க­ம­ளிக்­கிறார் மஹிந்த ராஜ­பக் ஷ
 (ஆர்.யசி)

நாட்டின் தேசிய பாது­காப்பை பல­வீ­னப்­ப­டுத்தி பொரு­ளா­தாரத்தை  வீழ்த்­தி­விட்டு சுதந்­திர தினம் கொண்­டாடிய அர­சாங்­கத்தின் அழை ப்பை ஏற்­க­மு­டி­யாத கார­ணத்­தி­னா­லேயே அதனை நிரா­க­ரித்தேன் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார்.

நாம் போராடி அழித்த ஆயுத காலா­சாரம் மீண்டும் நாட்டில் உயிர்ப்­பெற்­றுள்­ளது. வடக்கில் மீண்டும் ஆயுத வெடிச்­சத்தம் கேட்க ஆரம்­பித்­துள்­ளது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

முன்னாள் ஜனா­தி­பதி நேற்று குரு­நாகல் பகு­தியில் மக்கள் சந்­திப்­பு­களை மேற்­கொண்­டி­ருந்த நிலையில் சந்­திப்பின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

அந்­நி­யர்­களின் ஆக்­கி­ர­மிப்பில் இருந்து எமது முன்­னைய தலை­வர்கள் நாட்டை மீட்டு எமக்கு சுதந்­த­ரத்தை பெற்­றுக்­கொ­டுத்த பின்னர் இந்த நாட்­டுக்­கென சுய கொள்­கையில் முன்­னைய தலை­வர்­க­ளான சிறி­மாவோ பண்­ட­ர­நா­யக, பிரே­ம­தாச போன்­ற­வர்கள் நாட்டை கட்­டி­யெ­ழுப்­பினர். அதன் பின்னர் இந்த நாட்டில் முப்­பது ஆண்­டுகள் பயங்­க­ர­வாத சூழல் நில­வி­யது. எனினும் புலி­க­ளுக்கு போஷனை கொடுத்­த­வர்­களை நிரா­க­ரித்து நாம் இந்த நாட்டில் வெடி­குண்டு சத்­தங்­களை நிறுத்தும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டோம்.

இன்­றைய அர­சாங்கம் இந்த நிலை­மை­களை எல்லாம் மறந்து சுதந்­திரம் என்றால் என்­ன­வென்­பதை மறந்து செயற்­ப­டு­கின்­றது. நாம் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்து நாட்டில் அமை­தியை நிலை­நாட்­டிய போதும் இந்த அர­சாங்கம் மீண்டும் நாட்டில் ஆயுத கலா­சா­ரத்தை உரு­வாக்­கி­யுள்­ளது. இன்று வடக்­கிலும் தெற்­கிலும் மீண்டும் ஆயுத சத்­தங்கள் கேட்க ஆரம்­பித்­துள்­ளன. நிறுத்­தப்­பட்ட போர் சூழல் மீண்டும் நாட்டில் ஏற்­படும் நிலைமை உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

இன்று வெளிப்­ப­டை­யாக மக்­களை கொல்லும் நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. வடக்கில் ஆயுத குழுக்கள் மீண்டும் எழுர்ச்சி பெற்­றுள்­ளன. வடக்கில் இன்று பாது­காப்­பான சூழல் ஒன்று இல்­லா­மையே இதற்குக் கார­ண­மாகும் . தேசிய பாது­காப்பு என்­பது இன்று கேலிக்­கூத்­தாக மாறி­யுள்­ளது. அதேபோல் நாட்டின் பொரு­ளா­தாரம் மிகவும் மோச­மான நிலை­மையில் உள்­ளது. அர­சாங்­கத்தின் நிதி பற்­றாக்­கு­றையை நிவர்த்தி செய்ய நாட்டின் நிலங்­க­ளையும் சொத்­துக்­க­ளையும் விற்கும் நிலைமை இன்று ஏற்­பட்­டுள்­ளது. எம்மை திரு­டர்கள் என கூறிக்­கொண்டு இந்த அர­சாங்கம் நாட்டின் சொத்­துக்­களை அழித்தும், சூறை­யா­டியும் ஆட்சி நடத்­து­கின்­ற­னது. இவ்­வா­றான நிலையில் சுதந்­திர தினத்தை கொண்­டாடி நாட்டு மக்­களை ஏமாற்றி வரு­கின்­றனர்.

சுதந்­தி­ர­தின விழா­விற்கு எனக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டது. எனினும் நாம் சுதந்­திர தின விழாவில் கலந்­து­கொள்ள விரும்­ப­வில்லை. மோச­டிக்­கார ஆட்­சியின் சுதந்­திர தின நிகழ்வில் கலந்­து­கொள்ள நான் விரும்­ப­வில்லை. அதே நிலையில் அன்­றைய தினம் எனக்­கான மக்கள் சந்­திப்பு கூட்ட ங்கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தன. ஆகவே அவற்றை நான் புறக்­க­ணிக்க விரும்­ப­வில்லை.

நான் இன்னும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தான் உள்ளேன். எனக்­கென ஒரு தனிக் கட்சி இன்னும் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. என்னை ஆத­ரிக்கும் பொது எதி­ர­ணி­யி­ன­ருக்கு நான் ஒத்­து­ழைப்பு வழங்கி அவர்­களின் ஜன­நா­யக செயற்­பா­டு­க­ளுக்கு ஆத­ர­வாக என்னை இணைத்­துக்­கொண்­டுள்ளேன். அதற்­காக நான் தனிக் கட்சி உரு­வாக்­கி­யுள்ளேன் என கூற முடி­யாது. இப்போதும் நான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அங்கத்தவனாகவே உள்ளேன். என்னை கட்சியில் இருந்து வெளியேற்றவும் தனிமைப்படுத்தவும் சிலர் முயற்சித்து வருகின்றனர். ஆனால் நான் அரசியலில் இருந்து ஓய்வெடுக்க இன்னும் காலம் உள்ளது. மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் என்னை விட்டு நீங்கவில்லை என்றார்.