- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்

சீனா அருகே போர் விமானங்கள் பறக்கவிட்ட அமெரிக்கா !!
சீனாவின், ஷாங்காய் நகருக்கு மிக அருகே, இரண்டு போர் விமானங்களை, அமெரிக்கா பறக்கவிட்டது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுதும், கொரோனா தொற்று பரவத்துவங்கிய பின், அமெரிக்கா – சீனா இடையே, மோதல் போக்கு நிலவி வருகிறது. அமெரிக்காவில், டெக்சாஸ் மாகாணத்தின், ஹூஸ்டன் நகரில் உள்ள, சீன துாதரகத்தை, கடந்த சில நாட்களுக்கு முன், அமெரிக்கா அதிரடியாக மூடியது. இதற்கு பதிலடியாக, சீனாவின் செங்டு நகரில் உள்ள, அமெரிக்க துாதரகத்தை, சீனா மூடியது. இந்நிலையில், அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான, ‘பி – 8ஏ’ மற்றும் ‘இ.பி. – 3இ’ ஆகிய, இரண்டு போர் விமானங்கள், கிழக்காசிய நாடான, தைவான் கடல் பகுதியில் இருந்து, சீனாவின் ஸேஜியாங் மற்றும் புஜியான் கடல் பகுதிக்குள், நேற்று முன் தினம் நுழைந்தது.
சீன வர்த்தக தலைநகராக கருதப்படும், ஷாங்காய் நகரில் இருந்து, 76 கி.மீ., தொலைவில், இந்த விமானங்கள் பறந்தன. ‘சீன நகருக்கு மிக அருகே, அமெரிக்க போர் விமானங்கள் பறந்தது, இதுவே முதல் முறை’ என, கூறப்படுகிறது.இதுகுறித்து, ஹாங்காங்கை சேர்ந்த, ஊடகங்கள், செய்தி வெளியிட்டுள்ளன.