- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்

சீனாவின் ஜிலின் நகரின் புறநகர்ப்பகுதியில் கொரோனா தொற்று உறுதி
சீனாவின் ஜிலின் நகரின் புறநகர்ப்பகுதியான ஷூலானில் ஒரு குழுவினரிடம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஜிலின் நகரின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா மீண்டும் பரவாமல் தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஜிலின் நகரில் பலருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், இண்டர்நெட் மையங்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன. நிலைமை மோசமாக உள்ளதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.
ஜிலினில் மட்டும் இதுவரை 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், கொரோனா இரண்டாம் அலை வீசும் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உறைந்துள்ளனர்.