சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற “சீதா கல்யாணம்”

மாலை கனடாவின் ஸ்காபுறோ நகரில் உள்ள சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற “சீதா கல்யாணம்” என்னும் நாட்டிய நாடகத்தை கண்டு ரசிக்க மண்டபத்தை நிரப்பிய வண்ணம் அமர்ந்திருந்த சபையோர் மத்தியில் நாமும் பார்த்து மகிழ்ந்த அந்த நாட்டிய நாடகத்தின் ஒருபகுதி புகைப்படங்கள் இங்கு தோற்றமளிக்கின்றன.
சிலம்பொலி சேஸ்த்திர நடனப் பள்ளியின் ஸ்தாபகரும் குருவுமாகிய ஶ்ரீமதி ஜனனி குமார் அவர்களின் மாணவிகள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பங்கெடுத்த “சீதா கல்யாணம்” என்னும் நாட்டிய நாடகத்தில் இராமனாக பாத்திரமேற்று நடனமாடியும் நடித்தும் சபையோரின் பாராட்டுக்களைப் பெற்ற தாமிரா குமார் அரங்கேற்றம் கண்ட சிரேஸ்ட மாணவி, அத்துடன் சிலம்பொலி சேஸ்த்திர நடனப் பள்ளியின் ஸ்தாபகரும் குருவுமாகிய ஶ்ரீமதி ஜனனி குமார் அவர்களின் புதல்வியுமாவார்.

சுமார் 2 மணி நேரம் தொடர்ச்சியாக இடம்பெற்ற இந்த நாட்;டிய நாடகத்தின் இறுதியில் விழாவிற்கு ஆதரவு வழங்கிய அனைத்து வர்த்தக அன்பர்கள் மற்றும் குரு திருமதி ஜனனி குமார், அவரது குரு திருமதி பத்மினி ஆனந்த் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாட்டியக் கலைஞர் திரு மதுரை முரளீதரன் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரஞ்சித்து ஆகியோர் அனைவரும் கௌரவிக்கப்பட்டார்கள்.

தொடர்ந்து ஏனைய புகைப்படங்களும் இங்கே பதிவு செய்யப்படும் என்பதையும் குறிபபிட விரும்புகின்றோம்