சிவாஜி சிலை அகற்றம்: கமல்ஹாசன் கருத்து

கடற்கரை சாலையில் இருந்து நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை கடற்கரை காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நடிகர் சிவாஜி கணேசனின் முழு உருவ வெண்கல சிலை வைக்கப்பட்டு இருந்தது. இந்த சிலையால் கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் அந்த சிலை நேற்று முன்தினம் இரவு திடீரென அங்கிருந்து அகற்றப்பட்டது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவு:

‘சிவாஜி ரசிகர் மனதிலும் நடிக்க நினைத்த தமிழன். மனதிலும் பதிந்தவர். இனி ஒரு சிலை செய்வோம். அதை எந்த நாளும் காப்போம். அரசுக்குமப்பால் என் அப்பா!’

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.