சிரியாவில் நடந்துவரும் ராணுவதாக்குதல் காரணமாக இதுவரை 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

சிரியாவில் நடந்துவரும் ராணுவதாக்குதல் காரணமாக இதுவரை 400 பேர் கொல்லப்பட்டு உள்ளார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையான எண்ணிக்கை என்ன என்றகணக்கு இன்னும் வெளியாகவில்லை. தற்போது சிரியாவில் அரசுக்கும்,கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராககிளர்ச்சியாளர் படை போராடிவருகிறது. 2012ம் ஆண்டில் இருந்தே இந்தபோராட்டம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. ஆனால் தற்போது இது இறுதிக்கட்டத்தை அடைந்து இருக்கிறது. ஒரே இடம் தற்போது புரட்சிபடையிடம் கவுட்டா என்று பகுதிமட்டுமே இருக்கிறது. இந்தபகுதி அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே இருக்கும் முக்கியமான இடம் ஆகும். இதைகைப்பற்றத்தான் தற்போது அரசுபடை அங்குவான்வெளிதாக்குதல் நடத்திவருகிறது. உதவி இந்த பிரச்சனை தீவிரம் ஆனது, இதில் ரஷ்யா கைகோர்த்தபோதுதான். ரஷ்ய ராணுவம் சிரியா அரசுக்கு ஆதரவாக அங்குதாக்குதல் நடத்திவருகிறது. ரஷ்ய வான்படை அங்கு மோசமான குண்டுகளை போட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. அதிகம் முதல் நாள் முடிவில் மொத்தம் 85 பேர் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது 5 நாள் முடிவில் 400 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள் என்று கணக்குகாட்டப்பட்டு இருக்கிறது. இதுவரை 2000 பேர் மோசமாககாயம் அடைந்து உயிருக்குபோராடிக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் பலரின் உடல் மீட்கப்படவில்லை. பலநகரம் அங்கு இருக்கும் 100க்கும் அதிகமானகிராமங்கள் மொத்தமாக அழிந்துபோய் இருக்கிறது. 4 லட்சத்திற்கும் அதிகமானமக்கள் அந்தபகுதியில் மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். 27,000 குழந்தை இதில் இருக்கலாம் என்று இப்போதுவரை கணிக்கப்பட்டு இருக்கிறது.