சிம்பு நடிக்கும் அடுத்த படம் ‘அதிரடி’

சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படத்துக்கு ‘அதிரடி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்தப் படத்தில், மூன்று வேடங்களில் நடித்தார் சிம்பு. அவருடைய ரசிகர்கள் உள்பட யாருக்குமே இந்தப் படம் பிடிக்கவில்லை. கடந்த வருடம் ஜூன் மாதம் இந்தப் படம் வெளியானது.

நயன்தாரா படத்தில் பாடகராக அறிமுகமாகும் விக்னேஷ் சிவன்
அதன்பிறகு எந்தப் படத்திலும் நடிக்காத சிம்பு, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ளார். அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும் தீவிரம் காட்டி வருகிறார். அவரே இயக்கி, நடித்த ‘மன்மதன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போகிறார். வேறு சில படங்களில் நடிக்கவும் கதைகள் கேட்டு வருகிறார்.

அதற்கு முன்பாக, வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் சிம்பு. ‘வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘அதிரடி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.