- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்

சிதம்பரம் நீதிமன்ற காவல் அக்.,3 வரை நீட்டிப்பு
ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் நீதிமன்ற காவல், அக்.,3 வரை நீட்டிக்கப்பட்டது.
ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய பின்னர், கோர்ட் உத்தரவுப்படி, 14 நாள் நீதிமன்ற காவலில் திஹார் சிறையில் அடைத்தனர். அவரது நீதிமன்ற காவல் இன்று(செப்., 19) முடிவடைந்தது.

இதனையடுத்து, டில்லி சிபிஐ கோர்ட்டில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை நீட்டிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று, சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்., 3 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.