சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்ல அவசியம் இல்லை: முதல்வர் ஜெ. சில தினங்களில் வீடு திரும்புவார்: அப்போலோ மருத்துவமனை தகவல்

முதல்வர் ஜெயலலிதாவை சிகிச்சைக் காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல அவசியம் இல்லை. இன்னும் சில தினங்களில் மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்புவார் என்று அப்போலோ மருத்துவ மனை தலைமை இயக்க செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர் களுக்கு நேற்று அளித்த பேட்டி:

முதல்வர் ஜெயலலிதா சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவ மனையில் கடந்த 22-ம் தேதி நள்ளிர வில் அனுமதிக்கப்பட்டார். அவர் அனுமதிக்கப்பட்டபோது,அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறை பாடு இருந்தது. இதையடுத்து அவ ருக்கு அன்றைய தினமும்,மறுநாள் 23-ம் தேதி அன்றும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் மூலம் காய்ச்சல் கட்டுக்குள் கொண்டுவரப் பட்டது. இதையடுத்து முதல்வர் வழக்கமான உணவுகளை சாப்பிடத் தொடங்கினார். தொடர்ந்து முதல்வர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவருக்கு தேவையான மருந்துகள் வழங்கப்பட்டு வருகின் றன. மேலும் காய்ச்சல் வராமல் இருப் பதற்காக,மருத்துவ நெறிமுறை களின்படி தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தொடர்ந்து முதல்வர் வழக்கமான உணவுகளை உட்கொண்டு வருகிறார்.

இந்த சூழ்நிலையில் சமூக வலைத் தளங்களில் முதல்வரின் உடல்நலம் குறித்து தேவையில்லாத பொய்யான வதந்திகள் மற்றும் குழப்பங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. முதல்வர் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக பரப்பப் படும் வதந்திகள் முற்றிலும் பொய் யானவை. அடிப்படை ஆதார மற்றவை. முதல்வரை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. அதற்கான அவசியமும் தற்போது இல்லை. மருத்துவ சிகிச்சைகளை முதல்வர் நல்ல முறையில் ஏற்று வருகிறார்.

முதல்வர் பூரண நலம் பெற இன் னும் சில தினங்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டுமென்று அறி வுறுத்தி இருக்கிறோம். எனவே,இன் னும் சில தினங்களில் மருத்துவமனை யில் இருந்து முதல்வர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அதன்பின் தனது வழக்கமான அலுவல்களுக்கு திரும்புவார். இவ்வாறு சுப்பையா விஸ்வநாதன் தெரிவித்தார்.