சவுதி மன்னரை அவமதித்த இம்ரான் – கண்டனம்

சவுதி சென்றுள்ள பாகிஸ்தான் இம்ரான் கான், அந்நாட்டு மன்னரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இஸ்லாமிய ஒத்துழைப்பிற்கான அமைப்பு கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ளார். மெக்காவில், அந்நாட்டு மன்னர் சல்மானை சந்தித்தார்.

இம்ரானை, மன்னர், தனது மொழி பெயர்ப்பாளருடன் வரவேற்றார். தொடர்ந்து, இருவரும் பேசி கொண்டிருந்தனர்.

அப்போது, இம்ரான் கான், மொழிபெயர்ப்பாளரிடம், மன்னரிடம் ஏதோஒன்றை கூற சொல்லிவிட்டு, பதிலுக்கு காத்திருக்காமல், உடனடியாக அங்கிருந்து கிளம்பி சென்றார். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவின. பலர், சவுதி மன்னரை, இம்ரான் கான் அவமதித்து விட்டதாக கண்டனம் தெரிவித்தனர்.