- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

சவுதியில் புதிதாக 1,581 பேருக்கு கொரோனா
கொரோனா தாக்கம் அதிகரித்து சவுதி அரேபியாவில் புதிதாக 1,581 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சவுதியில் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நோய் பாதிப்புக்கு மேலும் 1,581 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 81,766 ஆக அதிகரித்தது. ஒரே நாளில் 17 பேர் பலியாகினர். சவுதியில் பலியானவர்களின் எண்ணிக்கை 458 ஆக உள்ளது. நோய் தொற்றுகளில் இருந்து புதிதாக 2,460 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 57,013 ஆக உள்ளது.
நாட்டில் நோய் பாதிப்புகள் அதிகரிக்கும் நகரங்களில் 483 பேர் பாதிப்புகளுடன் ரியாத் முன்னிலையிலும், தொடர்ந்து ஜெட்டாவில் 251 பேர் , மெக்காவில் 189 பேர் மற்றும் தம்மம் பகுதியில் 124 பேர் பாதிப்புகளாக உறுதியாகியுள்ளது.