சவால்களை சந்திக்க தமன்னா ரெடி!

‘இரண்டாவது ரவுண்டில் இப்படி ஒரு விஸ்வரூபம் எடுப்பார்’ என, யாருமே நினைத்துப் பார்க்காத வகையில், ரவுண்டு

கட்டி அடிக்கிறார் தமன்னா. தமிழிலும், தெலுங்கிலும், தொடர்ந்து புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்வரை, நடித்தோமா, துட்டு வாங்கினோமா, வீட்டுக்கு போனோமா என, அமைதியாக இருந்த இவர், தற்போது, பெண்ணுரிமை, கனவு, லட்சியம் என, பல்வேறு விஷயங்களை பேசுகிறார். சமீபத்தில் கூட, நடிகையரை பற்றி விமர்சித்த இயக்குனரை, காய்ச்சி எடுத்தார். ‘சவால்களை பார்த்து பயந்து ஓட மாட்டேன். ஒவ்வொரு நாளும் போராட்டம் தான்; அதை துணிச்சலுடன் எதிர்கொள்வேன்’ என, டுவிட்டரில், அவர் பதிவிடும் கருத்துக்களை பார்த்து, கோடம்பாக்கமே மிரண்டு போயிருக்கிறது.