- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

சர்வதேச இந்து இளைஞர் பேரவையுடன் இணைந்து மன்னார் மாவட்ட அறநெறி பாடசாலைகளின் இணையம் நடாத்தும் இந்து மாநாடு
சர்வதேச இந்து இளைஞர் பேரவையுடன் இணைந்து மன்னார் மாவட்ட அறநெறி பாடசாலைகளின் இணையம் நடாத்தும் இந்து மாநாடு எதிர்வரும் (08.10.2017) ஞாயிற்றுக்கிழமை மன்னார் நகர மண்டபத்தில் இரு அரங்குளாக நடைபெறவுள்ளது. காலை நிகழ்வுகள் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அரங்கில்; நல்லை திருஞானசம்பந்தர் ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த சுவாமிகள் முன்னிலையில் இடம்பெறும். மன்னார் அறநெறி பாடசாலைகளின் இணையத்தின் தலைவர் செந்தமிழருவி சிவஸ்ரீ மகா தர்மகுமார குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ் தேசப்பிரிய அவர்களும் சிறப்ப விருந்தினர்களாக யாழ்.பல்கலைகழக விரிவுரையாளர் சட்டத்தரணி கோசலை மதன,; கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன், வவுனியா தமிழ் சங்க ஸ்தாபகர் தமிழருவி த.சிவகுமாரன், கொழும்பு இராமநாதன் கல்லூரி அதிபர் திருமதி கோதை நகுலராஜா, சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஸதாபகர் இலக்கியமணி சி.கணேஸ்குமார் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக ஈலிங் கனக துர்க்கை ஆலய தலைவர் ரீ.யோகநாதன், லண்டன் சிவன் கோவில் அறங்காவலர் வி.கணேசமூர்த்தி ,மன்னார் ஆங்கில வள நிலைய முகாமையாளர் எஸ்.சண்முகலிங்கம் ,மன்னார் சித்தி விநாயகர் இந்துகல்லூரி அதிபர் த.தனேஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
பேரவையின் கொடியேற்றலுடன் ஆரம்பமாகும் இந்நிகழ்வில் நாதவாருதி சிவபாலன் சகோதரர்களின் மங்கல இசையும் அதனை தொடர்ந்து திருமுறை ஓதல் தமிழ்த்தாய் வாழ்த்தினை அறநெறி ஆசிரியர்கள் மற்றும் திருமதி லி.சுபோதினி வழங்குவார்கள்.திருக்கேதீச்சர பிரதம குரு சிவஸ்ரீதி.கருணானந்த குருக்கள் வழங்குவார்.அதனை தொடர்ந்து கீரி ஸ்ரீ முருகன் அறநெறி பாடசாலை மாணவர்களின் சிவதாண்டவம் நடன நிகழ்வும் கவின்கலாலய நாட்டியபள்ளி மாணவி கே.எஸ். திவிஸாவின் நடன நிகழ்வும் அதனை தொடர்ந்து சிறப்பு சொற்பொழிவுகள் பிரதம விருந்தினர் உரை இடம்பெறும் மன்னார் அறநெறி பாடசாலைகளின் இணையத்தின் செயலாளர் ம.நடேசசானந்தனின் ; நன்றியுரையுரையுடன் காலை நிகழ்வுகள் நிறைவு பெறும்.
மாலை நிகழ்வுகள் முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் அரங்கில் தமிழ்நாடு பேரூர் ஆதினம் இளைய சந்நிதானம் தவத்திரு.மருதாச்சலம் அடிகளார் முன்னிலையில் இடம்பெறும். சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இலங்கை கிளைத்தலைவர் சிவத்தமிழ் செல்வர் சிவ.கஜேந்திரகுமார் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலைமாமணி சொல்வேந்தர் சுகி சிவம் அவர்களும் சிறப்ப விருந்தினர்களாக வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் பேராதனை பல்கலைகழகத்தின் தமிழ்த்துறை தலைவர் வ.மகேஸ்வரன் முனைவர் திருமதி மனோன்மணி சண்முகதாஸ் யாழ். அறிவு திருக்கோவில் தலைவர் மனவளகலை பேராசிரியர் அருள்நிதி சி.முருகானந்தவேல் மட்டகளப்பு இந்து இளைஞர் மன்ற தலைவர் சீ.யோகேஸ்வரன,; ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக மன்னார் இந்து ஆலயங்களின் ஒன்றிய தலைவர் வைத்திய கலாநிதி மு.கதிர்காமநாதன், யாழ்.இந்துகல்லூரி அதிபர் ஏ.ஐ.தயானந்தராஜா, லண்டன் சிவன் கோவில் அறங்காவலர் எஸ்.பரமேஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்நிகழ்வில் வீராச்சாமி குழுவினரின் மங்கல வாத்தியத்தினை தொடர்ந்து பஞ்புராணம், தமிழ்த்;தாய் வாழ்த்தினை மன்னார் சித்தி விநாயகர் இந்து கல்லூரி மாணவர்களும்;.வரவேற்புரையினை சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஊடக இணைப்பாளர் கி.வசந்தரூபனும் ஆசியுரையினை சுன்னாகம் கதிரமலை சிவன் ஆலய பிரதம குரு கலாநிதி நா. சர்வேஸ்வரகுருக்களும் வழங்குவார்.அதனை தொடர்ந்து வயலின் இசையினை மட்டகளப்பு அழகியல் கல்லூரி மாணவர்களும் நாட்டிய கலையினை மன்னார் சைவக்கலை இலக்கிய மன்றத்தினரும் வழங்குவர்.
அதனை தொடர்ந்து சமய,சமூக,கலை பணிகளை ஆற்றிவரும் பெரியோர் கௌரவிப்பு நிகழ்வு நடைபெறும் இக்கௌரவிப்பு நிகழ்வில் கலாநிதி மறவன்புலவு க.சச்சிதானந்தம், சின்னத்துரை.தனபாலா சிவசம்பு. இராமகிருஸ்ணன்,சுப்பிமணியம்..பிருந்தாவனநாதன், வீராச்சாமி அரிகரபுத்திரன் ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கி பாராட்டும் நிகழ்வு இடம்பேறும்.அதனை தொடர்ந்து சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் செயலாளர் ல.சதீஸ்குமாரின் நன்றியுரையுடன் நிகழவுகள் இனிதே நிறைவுபெறும்.