சர்வதேசத்தை ஏமாற்றவே காணாமல்போனோர் அலுவலகம் செயற்படுகின்றது

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கூறுகின்றது

காணாமல் போனோரை கண் டறிவதற்கான அலுவலகம் மக்க ளின் நீதிக்கான கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக அமைக்கப் பட்டதல்ல என தெரிவித்துள்ள அர சியல் கைதிகளை விடுதலை செய் வதற்கான தேசிய அமைப்பு, சர் வதேசத்தை ஏமாற்றுவதற்கே அமைக்கப்பட்டுள்ளது என்றும் அதனை சர்வதேசத்துக்கு எடுத்துக் காட்டுவதற்கும் நீதி கோரவும் நாளை இடம்பெறும் போராட்டத் தில் கலந்துகொள்ளுமாறுஅழைப்பு விடுத்துள்ளது.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நாளை 31 ஆம் திகதி யாழ்.மாவட்ட செயலக முன்றலில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது, அதற்கு ஆதரவு தெரிவித்து மேற் குறித்த அமைப்பின் தலைவர் அருட்தந்தை மா.சத்திவேல் அனுப்பியுள்ள செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை வருமாறு,

வடகிழக்கில் நிலவிய அசாதாரண யுத்த சூழ்நிலையின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவரின் உறவுகள் தம் உறவு களை தேடி தீர்வுகிட்டாத நிலையில் 2015 தேர்தலில் புதிய அரசு உருவாக வாக்களித்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் நீதி கிட்டும் என எதிர்பார்த்தனர்.

நல்லாட்சி அரசும் தமிழர் விடயத்தில் இன ஆதிக்க மனப்பான்மையில் செயற்படுவ தோடு காணாமல்போனோர் தொடர்பில் உண்மையை வெளிக்கொணர்வதில் அசம ந்த போக்கை கடைபிடிப்பதால் தம் உறவுகளுக்கு நீதி கேட்டு 500 நாட்களை கடந்தும், தொடர் போராட்டம் நடத்துகின்றனர்.

இவர்களின் மனவலிமையை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கௌரவத்தோடு பாராட்டுவதோடு இவர்களால் சர்வதேச காணாமல் போனோர் தினத்தில் நடத்தப்படும் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமது முழு ஆதரவையும் வழங்குவதோடு, நீதிக்கான போராட்டத்தில் அனைவரையும் ஆதரவு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றது.

இராணுவ சுற்றிவளைப்பில் கைது செய் யப்பட்டோர் விசாரணைக்கென அழைத்து செல்லப்பட்டோர், சோதனை சாவடிகளில் தடுத்து வைக்கப்பட்டோர், யுத்த இறுதி நாட்க ளில் சரணடைந்தோர், உறவுகளால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டோர் என பல ஆயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக, காணா மல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உண்மையை கண்டறிய கடந்த மகிந்த ஆட்சி காலத்தில் உடலகம ஆணைக்குழு, மாஹாநாம திலக் கரட்ண ஆணைக்குழு அமைக்கப்பட்ட போதும் அவற்றிற்கு அரசு பூரண ஆதரவு அளிக்காததினாலும், சர்வதேச வழிமுறை பிரமாணங்களுக்கு அமைய விசாரணை மேற்கொள்ள முடியாமையாலும், ஆணைக் குழுக்களின் செயற்பாடுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டன.

ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் 2015 30ஃ1 அழுத்தம் காரணமாக தற்போ தைய ஆட்சியாளர்கள் காணாமல் தேடி அறிவதற்கான அலுவலகம் தொடர்பில், 2016-ம் ஆண்டே பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும், சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக நீண்டகால அமைதியின் பின்னர், இவ்வாண்டே அலுவலகம் செயற் பட இடமளித்தனர்.

இவ்வலுவலகம் மக்களின் நீதிக்கான கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக அமைக்கப்பட்டதல்ல. ஆட்சியாளர்களின் இனவாத அரசியல் தேவையை நிறைவேற்றவே அமைக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக் கப்பட்டோரின் உறவுகளுக்கு சலுகைகளை பெற்றுக்கொடுத்து அவர்களை அமைதியாக் குவதும், காணாமல் ஆக்கப்படுதலுக்கு காரணமாயிருந்த அரச தரப்பினரை, இராணு வத்தினரை பாதுகாக்கும் உள்நோக்கம் கொண்டதாகவே காணாமல் போனோரை கண்டறியும் அலுவலகத்தின் சட்டங்கள் இய ற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, தற்போதைய ஆட்சியாள ர்களும் அரச சார்புடைய அரசியல்வாதிக ளும், எந்தவொரு இராணுவத்தையும் யுத்த குற்றம் காரணமாக எந்தவொரு நீதிமன்ற த்திலும் நிறுத்த இடமளிக்கமாட்டோம், தண் டனை வழங்க இடமளிக்கமாட்டோம் என கூறித்திரிவது தமிழ் மக்களுக்கு ஏமாற்ற மளிப்பதோடு, நீதிக்கான போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக மட்டுமல்ல, காணா மல் ஆக்கப்படுதலுக்கு காரணமானவரை ஊக்கப்படுத்துவதாகவும் அமைகிறது.

அது மட்டுமல்ல, காணாமல் ஆக்கப்படுதல் தண் டனைக்குரிய குற்றமாக சட்டக்கோவையில் சேர்த்துக்கொள்ளப்படாமை எதிர்கால சமூ கத்தையும் பாதிப்புக்கு உட்படுத்தும். 1971 மற்றும் 1988, 89 காலகட்டங்க ளில் தெற்கில் எழுந்த இளைஞர் பிரச்சினை யின் போது ஒரு இலட்சத்திற்கும் அதிகமா னோர் இனந்தெரியாதோரால் கொல்லப்பட் டும், காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர்.

கிளர்ச்சிக்கு காரணமாக இருந்து மக்கள் விடு தலை முன்னனி தமது இனவாத அரசியலு க்காகவும், சிங்கள மக்களின் குறிப்பாக இரா ணுவத்தினரின் கோபத்தை தூண்டக்கூடாது என்பதற்காகவும், கொல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறுப்பினர்கள் தொடர்பில் அக்கறையற்று இருக்கின்றார்கள்.
இவர்கள் வடகிழக்கில் நடந்த யுத்த குற்றங்களுக்கும் பாராளுமன்றத்தில் அனுமதியளித்து அமைதி காத்தார்கள்.

இதுவும் வெட்கப்பட வேண்டி யதே. தம்முடைய மக்களுக்கு குரல் கொடுக் காதவர்கள் தம்முடைய இனத்திற்காக எழாத வர்கள் தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப் போகின்றார்களா? காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் ஏமாற்றும் இலங்கை அரசின் இன்னுமொரு முகம்.

மேலும் யுத்த காலத்தில் தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் ஐ.நா மனிதவுரிமைகள் அமைப்பு மனிதவுரிமை மீறலை மையப்படுத்தியே நோக்குகின்றது. அத்தோடு தனிமனித உரிமை சார்ந்தும் சிந் திக்கின்றது.

யுத்த காலத்தில், யுத்தத்தின் இறுதியில் தமிழர்கள் காணாமல் ஆக்கப்ப ட்டமை தமிழ் மக்களின் அரசியலோடும், இன அழிப்பின் இன்னுமொரு செயற்பாட்டு வடிவமாகவும் பார்க்காமை ஏமாற்றமளிக்கி ன்றது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் தனித்தனி குடும்பங்களாக சலு கைகளையும், உதவிப்பொருட்களையும், காணாமல் போனமைக்கான சான்றிதழை யும் பெற்றுக்கொள்வதற்கல்ல.

அது நீதிக்கான போராட்டம். தமிழ் மக்களின் அரசியலை மையப்படுத்திய அரசியல் தீர்வுக்கான போரா ட்டம். ஆதலால் தமிழ் மக்களின் அரசியலாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் இப்போராட்டத்தை தமதாக்கினாலேயே தமிழ் மக்களின் அரசியல் எதிர் காலம் நம்பிக்கைக்குரியதாக அமையும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.