சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேர் பலி: தென்காசி அருகே பரிதாபம்

திருநெல்வேலி மாவட்டம் தென் காசி அருகே சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார்.

தென்காசி மலையான் தெரு வைச் சேர்ந்தவர் முத்துப் பாண்டி(50). இவர்,தன்னை நாட்டு வைத்தியர் என்று கூறி சர்க்கரை நோய்,ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடை குறைத்தல் போன்றவைகளுக்கு மூலிகை மருந்து தயாரித்து கொடுத்து வந்துள்ளார். வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை தென்காசி அருகே அழகப்பபுரத்தில் தென் னந்தோப்பு ஒன்றில் வைத்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மூலிகை மருந்து கொடுத்து வந் துள்ளார்.

அதுபோல் நேற்றும் முத்துப் பாண்டி அங்கு சென்று சிலருக்கு சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து கொடுத்துள்ளார். அப்போது சிலர்,‘இந்த மருந்தை சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்பதை நாங்கள் எப்படி நம்புவது’ என கேட்டுள்ளனர்.

அதற்கு முத்துப்பாண்டி,‘இந்த மருந்தை நானே சாப்பிடுகிறேன்’ என கூறி மருந்தை அவர் சாப் பிட்டுள்ளார். இதையடுத்து அழகப் பபுரத்தைச் சேர்ந்த சாமி நாதன்(41),இருளாண்டி(40),பாலசுப்பிரமணியன்(30) ஆகி யோர் மூலிகை மருந்தை வாங்கி சாப்பிட்டுள்ளனர். மூலிகை மருந்து சாப்பிட்ட முத்துப்பாண்டி உள்ளிட்ட 4 பேரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர்.

தென்காசி அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்ட அவர்களில்,பாலசுப்பிரமணியன்,இருளாண்டி,முத்துப்பாண்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் இருந்த சாமிநாதன்,பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவ ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவத் துறை இணை இயக்குநர் தங்கராஜ்,சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அருணா ஆகியோர் தலைமையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் அழகப்பபுரம் விரைந்தனர். முத் துப்பாண்டியிடம் வேறு யாராவது மருந்து வாங்கி சாப்பிட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

மருத்துவத் துறை இணை இயக்குநர் தங்கராஜ் கூறும்போது,‘‘முத்துப்பாண்டி கொடுத்த மூலிகை மருந்தின் மாதிரி சேகரிக் கப்பட்டு சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனைக் காக அனுப்பப்பட்டுள்ளது. பரி சோதனை முடிவு வந்த பிறகே மருந்தில் என்ன கலக்கப்பட்டி ருந்தது என்பது தெரியவரும். மேலும்,இந்த பகுதியில் அவரிடம் வேறு யாராவது மருந்து வாங்கி சாப்பிட்டுள்ளனரா என்பது குறித்து கண்டறிய,சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.

மேலும் ஒருவர் பலி

அழகப்பபுரத்தைச் சேர்ந்த சவுந்தரபாண்டியன்(42) என்பவ ரும் நேற்று திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரும் முத்துப்பாண்டியிடம் மூலிகை மருந்து வாங்கி சாப்பிட்டு இறந்த தாக முதலில் கூறப்பட்டது. ஆனால்,அவர் மூலிகை மருந்து எதுவும் சாப்பிடவில்லை என்றும் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

‘நாட்டு மருத்துவத்தில் மருந்து இல்லை’

தமிழக மருத்துவக் கவுன்சில் தலைவரும் சர்க்கரை நோய் நிபுணருமான டாக்டர் கே.செந்தில் கூறும்போது,“கசப்பு சர்க்கரையை குறைக்கும் என நினைத்து ஏதாவது கசப்பான செடி,இலைகளை அரைத்து மூலிகை மருந்தாக கொடுத்திருப்பார். அதுதான் விஷமாக மாறியிருக்கும். நாட்டு மருத்துவத்தில் சர்க்கரை நோய்க்கு மருந்து இல்லை. போலி மருத்துவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் முறையாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்” என்றார்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை சர்க்கரை நோய் சிகிச்சை துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் அ.சண்முகம் கூறும்போது,“சர்க்கரை நோய் என்பது ஒரு குறைபாடு. சரியான உணவு,உடற்பயிற்சி செய்தாலே உடலில் பாதி சர்க்கரையை குறைத்துவிடலாம். அதன்பின் மாத்திரைகளை சாப்பிடலாம். மாத்திரை சாப்பிடுவதால் பக்க விளைவுகள் வராது” என்றார்.