- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு

” சமூகத்திற்காக உழைக்கும் ஆர்.எஸ்.எஸ்., ” – மோகன் பகவத்
ஆர்.எஸ்.எஸ்., கொள்கையை யாரும், எங்கும் திணிப்பது இல்லை என டில்லியில் நடந்த எதிர்கால பாரதம் என்ற தலைப்பில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., கருத்தரங்கில் தலைவர் மோகன்பகவத் பேசுகையில் குறிப்பிட்டார்.
ஆர்.எஸ்.எஸ்., தனித்துவம் கொண்டது. இந்த இயக்கத்தின் தரத்திற்கு இணையாக வேறு இயக்கம் இருக்க முடியாது. எங்கள் கொள்கையை யாருக்கும் திணிக்கவில்லை. கொள்கையை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.,இன்று வரை தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. நாட்டின் கட்டமைப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபடுகிறோம். மக்களை இணைத்து செல்லவே விரும்புகிறோம். சமூகத்திற்காக நாங்கள் உழைக்கிறோம். ஆர்.எஸ்.எஸ்., வளர்ச்சி பலத்தை நிரூபிக்கிறது.
சிறை செல்வது தேசபக்தி அல்ல என்று ஹெட்கேவர் கூறுவார். மற்ற மக்களுடன் இணைந்து நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்பார். இதனையே நாம் பின்பற்றுகிறோம். ஆர்.எஸ்.எஸ்., சுக்கு விளம்பரம் தேவையில்லை. விவாதங்கள் வரவேற்கப்பட வேண்டும். இவை ஆக்கப்பூர்வமானதாக அமையும். நாட்டில் வேற்றுமையில் ஒற்றுமையாக இருப்பதே நமது பலம். இவ்வாறு மோகன்பகவத் பேசினார் .
ஆர்.எஸ்.எஸ்., கரு்ததரங்கில் மத்திய அமைச்சர்கள், பாலிவுட் நடிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.