- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

சமாஜ்வாடி கட்சியில் குழப்பம்…. கட்சி இரண்டாக உடையப் போகிறதா?
உத்தரபிரதேசத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், சமாஜ்வாடி கட்சிக்குள் குழப்பங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான 325 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார். இதற்கு போட்டியாக உத்தரப்பிரதேச முதல்வரும் முலாயம் சிங்கின் மகனுமான அகிலேஷ் யாதவ் தற்போது தனியாக 235 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் முலாயம்சிங் தவிர்த்து சமாஜ்வாடி கட்சியின் நபர்கள் உள்ளனர். இரண்டு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதால், யார் சமாஜ்வாடி கட்சியின் கீழ் போட்டியிடுவார்கள் என குழப்பம் நிலவி வருகிறது. அகிலேஷ் தனியாக கட்சி தொடங்கவும் வாய்ப்பு இருப்பதாக உத்தரப்பிரதேச மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில மாதங்களாகவே சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் மற்றும் அவரது மகன் அகிலேஷ் யாதவுக்கும் இடையில் பிரச்னை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.