சப்பாத்திக்கு செஞ்ச உருளைக்கிழங்கு மசாலாவை வேணம்னா சொல்லுவ? கணவன் எலும்பை உடைத்த மனைவி

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கணவன், சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு மசாலாவை சாப்பிட மறுத்ததால், அவரை மனைவி கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அவரது கை எலும்பு உடைந்தது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் வசிக்கும் ஹர்சத் (40), தனது மனைவி தாராவுடன் வசித்து வந்தார். இந்நிலையில், சண்டையின் போது தனது மனைவி தாக்கியதில் தனது கை எலும்பு உடைந்ததாக ஹர்சத், போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரில் அவர் கூறியதாவது: கடந்து வெள்ளிக்கிழமை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த நான் மனைவியிடம் இரவு உணவு கேட்டேன். அவர் சப்பாத்தி, உருளைகிழங்கு மசாலா சாப்பிட கொண்டு வந்தார். எனக்கு நீரிழிவு (டயாபடிக்) நோய் உள்ளதால், உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்தேன்.

latest tamil news

 

அதற்கு தகாத வார்த்தையால் திட்டிய என் மனைவி, பாத்ரூமில் இருந்த கட்டையால் என்னை கடுமையாக தாக்கினார். இதில் என் வலது கை தோள்பட்டை எலும்பு உடைந்துவிட்டது. அருகிலிருந்தவர்கள் என்னை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இவ்வாறு அவர் புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.