- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு

சந்தானத்துக்கு ஜோடியாகும் தனுஷ் பட நாயகி
‘தில்லுக்கு துட்டு’ படம் சந்தானத்தை மாஸ் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்திவிட்டிருக்கிற நிலையில்,வரிசையாக பல படங்களில் ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார் சந்தானம். இந்நிலையில்,சந்தானத்திற்கு இன்னொரு மாஸ் கொடுக்கும் வகையில் தற்போது புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. இப்படத்தை ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்குகிறார். படத்திற்கு ‘ஓடி ஓடி உழைக்கணும்’ என்ற தலைப்பு வைத்துள்ளனர்.
இப்படத்தில் சந்தானம் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. அதோடு படத்தின் பூஜையும் இன்று சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக தனுஷ் நடித்த ‘அனேகன்’ படத்தின் நாயகி அம்ரியா தஸ்தூர் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை வாசன் விஷுவல் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன்,கே.எஸ்.சிவராமன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்கிறார்.