சட்ட திருத்தத்தை எதிர்த்து கேட்ட ரவி ஹூடா – கனடாவில் பேச்சுரிமை என்பது கேலிக்குற்றோ ?

ரமதான் மாதத்தில் ஒலிபெருக்கிகள் மீது தொழுகைக்கு தினசரி அழைப்புகளை மசூதிகள் அனுமதிக்கும் சட்ட திருத்தத்தை எதிர்த்து கேட்ட ரவி ஹூடா பிராம்ப்டன் பள்ளி கவுன்சில் தலைவர் பதவிலிருந்தும் ரீமேக்ஸ் வெளியிலிருந்தும் நீக்கப்பட்டார். கனடாவில் பேச்சுரிமை என்பது கேலிக்குற்றோ ?

ரவி ஹூடா ப்ராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரௌனை சட்ட திருத்தம் சார்பாக எதிர்த்து ட்விட்டரில் கேள்வி கேட்டதை “இஸ்லாமோபோபிக் ட்வீட்” என கூறப்பட்டு அவரது வேலையிலிருந்து நீக்கும்படி இஸ்லாமிய அமைப்புகளாலும் ப்ராம்ப்டன் மேயர் அலுவலகத்தாலும் அழுத்தும் கொடுத்ததாக கூறப்படுகிறது.

முஸ்லிம்களுக்கான சமூக உணர்வை வளர்ப்பதற்காக இந்த லவூட் ஸ்பீக்கர் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அவர்கள் பொதுவாக ரமலான் நோன்பு மாதத்தில் பிரார்த்தனைக்காக கூடுவார்கள், ஆனால் COVID-19 காரணமாக முடியாது, என்ற ப்ராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரௌனின் டீவீட்டுக்கு
“அடுத்தது என்ன?” ஒரு ட்வீட்டில் ஹூடா கேள்வி கேட்டதிற்காக அவர் வேலைகளிலிருந்து நீக்கப்பட்டார்.

ஒட்டகங்களுக்கும் ஆடு சவாரிகளுக்கும் தனித்தனி பாதைகள், தியாகத்தின் பெயரில் வீடுகளில் விலங்குகளை படுகொலை செய்ய அனுமதித்தல், பின் அனைத்து பெண்களும் தலையில் இருந்து கால் வரை கூடாரங்களில் தங்களை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை (sic) … அனைத்தையும் வோட்டுக்காக ? என்றும் தன் ட்விட்டர் பதிவில் திரு ரவி ஹூடா பதிவு செய்திருந்தார்.

ஹூடா ஒரு கவுன்சிலராக இருந்த பள்ளியின் முதல்வர், அந்தக் கருத்துக்கள் பள்ளியில் பாதுகாப்பான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய இடத்தை உருவாக்க உதவாது என்று கூறினார். இஸ்லாமியோபொபிக் ட்வீட்டை அவர் வெளியிட்டதை அடுத்து, பிராம்ப்டனில் உள்ள பள்ளி கவுன்சில் சேர் பதவியிலிருந்து அவரை நீக்கியதாக பீல் மாவட்ட பள்ளி வாரியம் தெரிவித்துள்ளது.

ஹூடா RE / MAX உடன் ஒரு ரியல் எஸ்டேட் ஏஜெண்டாகவும் இருந்தார். ஹூடாவின் கருத்தை கண்டிப்பதாக கூறி ரீமேக்சும் அவருடனான உறவை முறித்துக்கொண்டது.

ரவி ஹூடாவை பதவி நீக்கம் செய்ததை வரவேற்ற ப்ராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுன் ”
“நம் சமூகத்தில் வெறுப்புக்கும் இஸ்லாமியோபொபியாவிற்கும் இடமில்லை” என்று ட்விட்டரில் கூறினார்.