சட்டமன்றத்தில் ஸ்டாலின் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் சாலை மறியல்

சட்டமன்றத்தில் ஸ்டாலின் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம், கடலூர், கரூரில் அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கரூர்,கடலூர் உட்பட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.  சென்னையில் காசிமேடு உள்ளிட்ட பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம், நாகை, ஈரோடு, மதுரை, திருச்சி, திண்டுக்கல், கோவை, விருதுநகர், வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுகவினர் போராட்டம் நடத்தினர். தாம்பரம்–குரோம்பேட்டை சாலையில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பல பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.