- தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?
- உலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை
- பெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை
- நக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி
- ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்

சசிகலா போயஸ் கார்டன் திரும்ப எந்த தார்மீக உரிமையும் இல்லை: கவுதமி
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலில் இன்று மிக முக்கியமான நாளாகும். சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என்று அறிவித்து, 4 ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
தீர்ப்புக்குப் பிறகு அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு, ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார்.
ஜெயலலிதா மறைவிலிருந்தே தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகளை எழுப்பி வரும் கவுதமி, தற்போது “சசிகலாவுக்கு, கூவத்தூரிலிருந்து பரப்பன அக்ரஹாரத்துக்கு நேரடியாக வழி இருக்கிறது. அவர் வேதா நிலையம் திரும்ப எந்த தார்மீக உரிமையும் இல்லை. ஜெயலலிதாவுக்கான நியாயம் வேண்டும்” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.