சசிகலா குடும்பத்தினர் சொல்லச்சொன்னதையே ஊடகங்களிடம் கூறினோம்: திண்டுக்கல் சீனிவாசன்

முன்னாள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா குடும்பத்தினர் என்ன சொல்லச் சொன்னார்களோ அதையே ஊடகங்களிடம் கூறியதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ‘ஜெயலலிதா இட்லியும் சாப்பிடவில்லை, சட்னியும் சாப்பிடவில்லை. நாங்கள் சொன்னது எல்லாம் பொய். பொதுமக்கள் எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று மதுரையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திண்டுக்கல் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற திண்டுக்கல் சீனிவாசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, “ஜெயலலிதா உணவு அருந்தியதாக சசிகலா குடும்பத்தினர் கூறச்சொன்னதையே ஊடகங்களிடம் நாங்கள் தெரிவித்தோம். இதையே மதுரை பொதுக்கூட்டத்தில் நான் தெளிவுபடுத்தி விளக்கினேன். மேலும், ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதில் தவறில்லை” என்று கூறினார்.