சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கியது பெங்களூரு சிறை நிர்வாகம்

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்,  கணவர் ம. நடராஜன் உயிரிழந்ததையடுத்து, சசிகலா பரோல் கேட்க முடிவு செய்து இருந்தார்.
இதன்படி, பெங்களூரு சிறை கண்காணிப்பாளரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் பரோல் விண்ணப்பிக்கும் நடைமுறைகளை துவங்கினர். சசிகலா தரப்பில் 15 நாட்கள் பரோல் கேட்கப்பட்டது. இதையடுத்து,  15 நாட்கள் பரோல் வழங்கி சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
பெங்களூருவில் இருந்து சாலை மார்க்கமாக சசிகலா தஞ்சாவூர் செல்கிறார். கடந்த முறை சசிகலா பரோலில் வந்த போது, விதிக்கப்பட்ட நிபந்தனைகளே  இந்த முறையும்  விதிக்கப்பட்டு உள்ளது.