சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

அதிமுக எம்பி. மைத்ரேயனின் புகார்கள் தொடர்பாக பிப்ரவரி 28-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவின் மறைவுக்குப் பின், டிசம்பர் 29-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வானார். டிசம்பர் 31-ம் தேதி பொறுப்பேற்றார்.

ஜெயலலிதா காலமான அன்றே முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், பிப்ரவரி 5-ம் தேதி தன் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் சசிகலா சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, முதல்வராகும் முயற்சியை எடுத்தார்.

இந்நிலையில், பிப்ரவரி 7-ம் தேதி அதிமுக தலைமையை ஓ.பன்னீர்செல்வம் எதிர்த்தார். அடுத்தநாள் அதிமுக பொரு ளாளர் பொறுப்பில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அப்போதே, பொருளாளர் பொறுப்பில் இருந்து தன்னை நீக்க சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை என பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதன்பின், அவைத் தலைவர் மதுசூதனன், ஓ.பன்னீர் செல்வம் பக்கம் வந்தார். அவரையும் கட்சியை விட்டு சசிகலா நீக்கினார். அப்போது, சசிகலா தன்னை நீக்கும் முன் நான் அவரை நீக்கிவிட்டதாக மதுசூதனன் தெரிவித்தார்.

மதுசூதனன் கடிதம்

தொடர்ந்து, அதிமுகவின் சட்ட விதிகளை காரணம் காட்டி, சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனத்தை ஏற்க கூடாது என தேர்தல் ஆணையத் துக்கு மதுசூதனன் கடிதம் எழுதி னார்.

கடந்த 14-ம் தேதி சொத் துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் சசிகலா சிறைக்கு சென்றார். இந்நிலையி்ல், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்பியான வி.மைத்ரேயன் தலைமையில் 11 எம்பிக்கள் கொண்ட குழுவினர் நேற்று முன் தினம் (16-ம் தேதி) டெல்லியில், இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தனர். அதில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பாக தெரி வித்திருந்தார்.

இந்நிலையில், புகாருக்கு பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணை யம் சசிகலாவுக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சசிகலா இப்போது இருக்கும் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. தேர்தல் ஆணை யத்தின் சார்பு செயலாளர் அஷ்வனி குமார் மோகல் அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது:

சரியான முடிவை..

அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பாக, வி.மைத்ரேயன் அளித்த மனுக்களின் நகல்களை தங்களுக்கு அனுப்பி யுள்ளோம். இவற்றுக்கான தங்களின் பதிலை பிப்ரவரி 28-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அனுப்பாவிட்டால், தாங்கள் பதில் அளிக்க விரும்பவில்லை என கருதி, சரியான முடிவை தேர்தல் ஆணையம் எடுக்கும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.