- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

கொல்லப்பட்ட ரஷ்ய பத்திரிகையாளர் உயிருடன் திரும்பினார்
ரஷ்ய பத்திரிகையாளரான ஆர்காடி பாப்செங்கோ (41) கடந்த செவ்வாயன்று உக்ரைனிலுள்ள அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியது. இதனை கண்டு அவரது குடும்பத்தினரும் அவரது சக ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
அவர் இரத்த வெள்ளத்தில் கிடக்கும் படம் ஒன்றும் பத்திரிகைகளில் வெளியானது. ரஷ்ய பாதுகாப்புப்படையினர் ஆர்காடியையைக் கொல்வதற்காக உக்ரைனைச் சேர்ந்த ஒருவனுக்கு 40,000 டாலர்கள் கொடுத்திருந்தனர். அந்த மனிதன் அவரை கொல்ல இன்னொரு மனிதனை வேலைக்கு அமர்த்தினான். அவர்கள் யாரெனக் கண்டுபிடித்த உக்ரைன் போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
இந்நிலையில் நண்பர்களும் உறவினர்களும் ஆர்காடியின் இறுதிச் சடங்கிற்காக ஆயத்தமானர்கள். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஆர்காடி தொலைக்காட்சியில் தோன்றினார்.
தான் இறந்ததாக செய்தி வந்ததற்காக முதலாவது தனது மனைவியிடமும் பின்னர் தனது சகாக்கள் உட்பட அனைவரிடமும் ஆர்கேடி மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அவரை தொலைக்காட்சியில் கண்டதும் அவரது நண்பர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்க, சில நண்பர்கள் கண்ணீர் வடித்தனர். தன்னை கொல்வதற்காக ரஷ்யா ஆட்களை ஏற்பாடு செய்திருப்பதை அறிந்ததும் அவர்களைக் கைது செய்வதற்காகவே போலீசார் இவ்விதம் திட்டமிட்டதாகவும் தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். அவரைக் கொலை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மனிதன் கைது செய்யப்படும் வீடியோவும் வெளியாகியுள்ளது. சினிமாவில் வருவதுபோல் அரங்கேறிய இந்த சம்பவங்கள் உக்ரைனில் மட்டுமின்றி ரஷ்யாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.