- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மெக்சிகோவில் ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை
மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. தற்போது, 2,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 141 பேர் உயிரிழந்துள்ளனர். ‘கொரோனா பாதிப்பு அதிகமுள்ள அமெரிக்காவில் இருந்து யாரும் தங்கள் நாட்டிற்குள் நுழையக் கூடாது. அவர்களை அனுமதித்தால் மேலும் பாதிப்பு அதிகரிக்கும்’ என, மெக்சிகோ மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், நாட்டின் எல்லைகளை மெக்சிகோ அரசு மூடியுள்ளது.
இந்நிலையில், தெற்கு மெக்சிகன் பகுதியில் உள்ள மகஹூல் நகர மேயர் ஓபிட் துரோன் கோமிஸ், தனது நகரில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிற்பித்தார். அந்த நகரில் வாகனப் போக்குவரத்து முடக்கப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன.இதனால், போதைப் பொருட்களை கடத்த முடியாமல் தவித்த ஒரு கும்பல், மேயரைக் கொல்ல திட்டமிட்டது. வாகனத்தில் வெளியில் சென்ற மேயரை, அந்த கும்பல் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியது. இதில் படுகாயமடைந்த மேயர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மக்கள் நலனுக்காக ஊரடங்கு பிற்பித்தவரை போதைக் கடத்தல் கும்பல் சுட்டுக் கொன்றது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த கும்பலைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது