கொரோனா பரவலுக்கு பெண்களே காரணம் – இஸ்லாமிய மதபோதகரின் கருத்து

பெண்களின் தவறான நடவடிக்கை காரணமாக கொரோனா வைரஸ் மனிதகுலத்தின் மீது ஏவப்பட்டு உள்ளது என்ற பாகிஸ்தான் மதபோதகர் கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்து உள்ளது.
மவுலானா தாரிக் ஜமீல் பாகிஸ்தானின் முன்னணி மத போதகர்களில் ஒருவர். அவரது பிரசங்கங்கள் ரமலான் மாதத்தில் பாகிஸ்தானின் அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன, அவருக்கு  யூடியூப் சேனலில் 35 லட்சம் பின் தொடர்பவர்கள் உள்ளனர்.
ஜமீல் தப்லிகி ஜமாஅத் குழுவின் மூத்த உறுப்பினராக உள்ளார், இது பாகிஸ்தானில் தொற்றுநோயை விதைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இவர் மார்ச் மாதத்தில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்ட  கூட்டத்தை நடத்தினார். இதனால் வெகுவாக கொரோனா பரவியதாக அவர் மீது குற்றம்சாட்டபட்டது.
இந்த நிலையில் மவுலானா தாரிக் ஜமீல் ஒரு தொலைக்காட்சி உரையாடலில் நாட்டில் பெண்களிடம் அடக்கமில்லை.நடனமாடுகிறார்கள்.குறைந்த ஆடைகளை அணிகிறார்கள். பெண்களின் தவறான நடவடிக்கை காரணமாக கொரோனா வைரஸ் மனிதகுலத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என கூறினார்.
பிரதமர் இம்ரான்கான்  மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில், நிதி திரட்டும் நிகழ்வின் போது இந்த தவறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
அதே பிரார்த்தனையில், உரையில் ஒரு குறிப்பிட்ட கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். பெண்களைப் பற்றிய அவதூறான கருத்துக்களுக்காக மன்னிப்பு கேட்கப்படவில்லை.
மனித உரிமைகள் மந்திரி ஷிரீன் மசாரி பெண்கள் குறைந்த ஆடை அணிந்ததன் விளைவாக தொற்றுநோய் உருவாகியதாக யாரோ ஒருவர் பரிந்துரைப்பது “வெறுமனே அபத்தமானது”.
இது வெறுமனே அறியாமையான கருத்து, தொற்றுநோயை குறித்த தவறான கருத்து மனநிலையை பிரதிபலிக்கிறது. முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் கூறினார்.