- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி

கொரோனா சோதனை கருவி-அலருது அமெரிக்கா : வெள்ளை மாளிகையில் நடந்த அவசரக் கூட்டம்
கொரோனா தாக்கம் குறித்து, அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த அவசரக் கூட்டத்திற்கு பின், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்காவில் நேற்று (மார்ச் 5) கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவரை தவிர, மற்ற அனைவரும் வாஷிங்டன் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். கொரோனா வைரஸ் தாக்கத்தால் அமெரிக்காவில் இதுவரை, 20 மாகாணங்களைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் இருப்பதை உறுதி செய்யும் சோதனை கருவிகள் போதுமான அளவு கைவசம் இல்லை. தற்போது, 10 லட்சம் கொரோனா வைரஸ் சோதனை கருவிகளை தேவை உள்ளது. அவற்றை ஒரு வாரத்திற்குள் தருமாறு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அவற்றை ஒரு வாரத்துக்குள் தயாரிக்க இயலாது.

இருந்தும், கொரோனா தாக்கத்தை சமாளிக்க பெரும் அவசர நிதியை ஒதுக்கீடு செய்ய அமெரிக்க காங்கிரஸ் சபை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, 8 பில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
‘உலக வல்லரசு நாடான அமெரிக்காவே கொரோனாவைச் சமாளிக்க முடியாமல் இப்படி தடுமாறுவதால், மற்ற நாடுகளின் நிலை கவலைக்குறியதாகவே இருக்கும்’ என, பல நாடுகளும் இதுகுறித்து பேசத் துவங்கியுள்ளன.