- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

கொடுமைபடுத்தியதாக கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது தம்பி மனைவி புகார்
கிரிக்கெட் வீரர் யுவராஜ் மாடல் அழகியும் இந்தி நடிகையுமான 29 வயதான ஹாசல் கீச்சை திருமணம் செய்து உள்ளார். இவர்கள் திருமணம் கடந்தாண்டு நவம்பர் 18ம் தேதி நடந்தது. இந்த் தீபாவளி யுவராஜ் சிங்கிற்கு தலைத்தீபாவளியாகும்.
இந்த நிலையில் வராஜ் சிங்கின் தம்பியின் மனைவி ஆகான்ஷா சர்மா கணவர் சோரவர் சிங், மாமியார் ஷப்னம் சிங் மற்றும் மைத்துனர் யுவராஜ் சிங் ஆகியோருக்கு எதிராக புகார் கொடுத்து உள்ளார்.ஆகான்ஷா இது குறித்து தற்போது பேச மறுத்து விட்டார்.அக்டோபர் 21 அன்று முதல் விசாரணைக்குப் பின்னர் இந்த விஷயத்தில் அவர் பேசுவார்.ஆனால் அவரது வழக்கறிஞர் ஸ்வாதி சிங் மாலிக் இந்த விவகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆமாம் யுவராஜ், சோரவர் மற்றும் அவர்களின் தாயான ஷப்னம் ஆகியோருக்கு எதிராக ஆகான்ஷா குடும்ப வன்முறை வழக்கு தாக்கல் செய்துள்ளார் என கூறினார்.
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தம்பியின் மனைவி ஆகான்ஷா சர்மா சமீபத்தில் பிக் பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது என் மாமியார் எனக்கு தொல்லை கொடுத்து வந்தார். நான் என் கணவருடன் தேன்நிலவுக்கு சென்ற போது கூட யுவராஜின் மொத்த குடும்பமும் எங்களுடன் வந்து எங்கள் தனிமையை கெடுத்தார்கள்.
என்னை கர்ப்பமடையுமாறு என் மாமியார் தொடர்ந்து வலியுறுத்தியதால் நான் திருமணம் ஆன நான்கே மாதங்களில் என் கணவரை விட்டு பிரிந்து என் தாய் வீட்டுக்கு வந்து விட்டேன் என கூறி பரபர்ப்பை ஏற்படுத்தினார்.இவர் யுவராஜ் தம்பியை 2014 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.