கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை:ஆந்திர முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

“ஆந்திர மாநிலத்தின், கொசஸ்தலை கிளை ஆற்றில், நான்கு இடங்களில் தடுப்பணை கட்டும் விவகாரம் குறித்து உங்களது கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். இந்த தடுப்பணை கட்டுவதால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். தடுப்பணை கட்டுவது குறித்து தமிழகத்துடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கவில்லை.

ஆந்திர அரசு தன்னிச்சையாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தின் நிலைப்பாட்டை அறிந்த பின் ஆந்திரா நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனவே, தடுப்பணை கட்டும் பணிகளை ஆந்திர அரசு உடனே கை விட வேண்டும். இதில் தாமதம் காட்டாமல், தடுப்பணை கட்டும் பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரி, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.