கொக்குவிலில் இளைஞன் மீது வாளால் வெட்டி விட்டு தப்பியோடியவர்களை ஊர் இளைஞர்களால் மடக்கிப் பிடித்தனர்

யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு பகுதியில் சமூக விரோத கும்பலான வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த நபரொருவர் ஊரவர்களி டம் வசமாகமாட்டியுள்ளார். இதனை அடுத்து ஊர் இளைஞர்கள் குறித்த நபரை யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கொக்குவில் மேற்கு காந்திஜீ பகுதியில் கடந்த செவ்வாய்க் கிழமையன்று மதியம் மோட்டார் சைக்கிளில் சென்ற குழு ஒன்று அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை வாளால் வெட்டி தாக்கியுள்ளது.

இதன் போது அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று திரண்டு குறித்த கும்பலை மடக்கி பிடிக்க முயன்றுள்ளனர். எனினும் குறித்த குழுவினர் தப்பியோடியுள்ளனர். தொடர்ந்து வாள்வெட்டு கும்பலை கிரா மத்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்து துரத்தி ஒருவரை மடக்கி பிடித்துள்ளனர். பிடிபட்ட இளைஞருக்கு கிராம இளைஞர்கள் அனை வரும் சேர்ந்து நல்ல கவனிப்பு வழங்கியுள் ளனர். இதன்போது “கவனிப்பு” தாங்க முடி யாமல் குறித்த இளைஞர் அலறியுள்ளார். ஏனைய இளைஞர்கள் பிடிபட்ட இளை ஞரை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்து ள்ளனர். இதனை அடுத்து பிடிபட்ட இளை ஞருக்கு அனைத்து இளைஞர்களும் சேர் ந்து சரியான கவனிப்பு வழங்கியுள்ளனர். பின்னர் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைய டுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்தனர். தொடர்ந்து பிடிபட்ட இளைஞர் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்துள்ளதோடு, குறித்த இளைஞரோடு மோட்டார் சைக்கிளில் வந்த ஏனையவர்களை தேடி வருகின்ற னர். இவர்கள் தொடர்பான சீசீரிவி கமரா பதிவுகளும் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.