- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு

கெளரவ டாக்டர் பட்டத்தை மறுத்த டிராவிட்! கொண்டாடும் ரசிகர்கள்!
கெளரவ டாக்டர் பட்டம் என்பது திறமை, பங்களிப்பு மற்றும் பிரபலம் போன்றவற்றுக்கான முக்கியமான அங்கீகாரம்.
இந்தக் கெளரவத்தை வேண்டாம் என்று சொல்லி மறுத்துள்ளார் ராகுல் டிராவிட்.
ராகுல் டிராவிடின் பல சாதனைகளுக்குக் கெளரவம் செய்யும் விதமாக அவருக்குக் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க கர்நாடகாவின் பெங்களூர்ப் பல்கலைக்கழகம் முடிவு செய்தது. ஆனால் இதைப் பெற மறுத்துவிட்டார் டிராவிட்.
தானே தன் சொந்த முயற்சியில் விளையாட்டுத் துறையில் ஆய்வு செய்து டாக்டர் பட்டத்தை வாங்கிக்கொள்வதாகப் பல்கலைக்கழகத்துக்குப் பதில் அளித்துள்ளார்.
இந்தத் தகவல் சமூகவலைத்தளத்தில் வெளியானவுடன் டிராவிடுக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. இந்தக் காலத்தில் இப்படியும் ஒருவர் என்று ரசிகர்கள் டிராவிடைக் கொண்டாட இன்னுமொரு காரணமாக இந்தச் செய்தி அமைந்துள்ளது.