கெஜ்ரிவால் மீது மிளகாய்பொடி வீச்சு

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய்பொடி வீசப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் இன்று(நவ.,20) வழக்கம் போல் தலைமை செயலகம் வந்தார். அங்கு ஒரு மர்மநபர் கெஜ்ரிவால் மீது மிளகாய்பொடி வீசிவிட்டு ஓடியுள்ளார். இதில் கெஜ்ரிவாலுக்கு எந்த பாதிப்பும் இல்லை . போலீசாரை மர்ம நபரை பிடித்து விசாரித்தனர். அவரது பெயர் அனில் சர்மா, மிளகாய்பொடியை ஒரு தீப்பெட்டியில் கொண்டு வந்ததாக தெரிகிறது.

டில்லியில் முதன் முறையாக முதல்வராக பொறுப்பேற்ற கெஜ்ரிவால் சில அரசியல் காரணங்களு்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ஆவேசமுற்ற ஒரு தொண்டர் கெஜ்ரிவாலை கன்னத்தில் அறைந்தார். மேலும் கெஜ்ரிவால் மீது சிலர் கறுப்பு மை வீசினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீசிய சம்பவம் டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மிளகாய்பொடி வீச்சுக்கு ஆம்ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த செயல் டில்லி போலீசாரின் குறைபாடே ஆகும். டில்லியில் முதல்வருக்கு கூட பாதுகாப்பு இல்லை என அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.