கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் விபத்தில் பலி

ஓய்வுபெற்ற பிரபல கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இவ்விபத்தில் அவரது மகள் உட்பட 9 பேர் பலியாயினர்.

ஓய்வுபெற்ற பிரபல கூடைப்பந்தாட்ட வீரரும், 5 முறை என்.பி.ஏ., சாம்பியனுமான கோப் பிரயன்ட்(41) தனியார் ஹெலிகாப்டரில் பயணித்த போது, விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இவ்விபத்தில் அவரது மகள் கியானா உள்பட 9 பேர் பலியாயினர். கோப் மரணத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இவர் ஒரு போட்டியில் விளையாடி முடித்தபின் வீட்டிற்கு மகளுடன் ஹெலிகாப்டரில் திரும்பி கொண்டிருந்தார். இந்நிலையில் ஹெலிகாப்டரில் தீப்பிடித்தது. தீயை அணைக்க அவசரகால படையினர் முற்பட்டனர். ஆனால் யாரையும் காப்பாற்ற முடியவில்லை. விபத்தில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர். கோப் வயது 41 என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் தனது 13 வயது மகளுடன் மரணம் அடைந்தார். உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் இந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஓய்வுபெற்ற வீரரான இவர், 5 முறை என்.பி.ஏ., சாம்பியன் பட்டம் பெற்றவர்.