- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

கூகுளின் ஆதிக்கத்திற்கு எதிராக களமிறங்கும் இந்தியா !!
கூகுள் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை தடுக்க இந்திய தொழில் நுட்ப நிறுவனங்கள் ஒன்றாக செயல்பட திட்டமிட்டுள்ளன.
அண்மையில் பேடிஎம் ஆப்., கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் மீண்டும் இணைக்கப்பட்டது. இந்நிலையில் பிளேஸ்டோரில் இடம் பெற்றுள்ள கட்டணம் வசூலிக்கும் ஆப்கள் 30 சதவீதத்தை கமிஷனாக தர வேண்டும் என்ற கூகுளின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் சனியன்று நடத்திய கூட்டத்தில் கூகுளின் ஏகபோக கொள்கைக்கு எதிராக 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் புகார் தெரிவித்துள்ளன. பேடிஎம், இந்தியா மார்ட் போன்ற நிறுவனங்கள் இந்திய ஐடி நிறுவனங்களை ஒருங்கிணைந்து புதிய அமைப்பினை உருவாக்கும் திட்டத்தில் உள்ளன. ஆனால், கூகுளின் ஆன்ட்ராய்டு சிஸ்டம் நாட்டின் 95 சதவீத ஸ்மார்ட் போன்களில் ஆதிக்கம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது.