- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்

குஷ்பு ப.ஜ.பா வுக்கு தாவுகிறாரா? தலைமைக்கு தலையாட்டமாட்டேன் : புதிய கல்வி கொள்கை
புதிய கல்வி கொள்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள காங்., தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு, ‘தலைமைக்கு தலையை ஆட்டும் பொம்மை நான் இல்லை’ என தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதற்கு காங்., உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், புதிய கல்வி கொள்கைக்கு காங்., கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: புதிய கல்வி கொள்கையில், கட்சியின் நிலைப்பாட்டிலிருந்து எனது நிலைப்பாடு வேறுபடுகிறது. இதற்காக ராகுலிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். நான் உண்மையை தான் பேசுகிறேன். நான் கட்சி தலைமைக்கு தலையை ஆட்டும் ரோபோ அல்ல. கட்சித் தொண்டர் என்பதை விட நாட்டின் குடிமகனாக எனது கருத்தை பதிவிட்டுள்ளேன்.
புதிய கல்வி கொள்கையில் சில இடங்களில் குறை இருப்பினும், இந்த மாற்றத்தை நான் வரவேற்கிறேன். எதிர்கட்சி என்பது நாட்டின் எதிர்காலத்திற்காக உழைப்பது. ஒன்றிணைந்து செயல்படுவதே அரசியல். இதனை பா.ஜ., புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக நான் பா.ஜ.,வில் இணைவேன் என்பதில் உண்மையில்லை. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். குஷ்புவின் இப்பதிவு காங்., கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.