- நடிகர் மிதுன் சக்ரவர்த்தி கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்
- நாங்க ஆட்சிக்கு வந்தால் ரௌடியிசமே இருக்கது : தி மு க ஸ்டாலின் தமாஷ் !!
- 142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்
- இலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் !!
- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?

‘குல்பி ஐஸ்’ விற்கும் அர்ஜுனா விருது வென்ற குத்துச்சண்டை வீரர்
இந்திய குத்துச்சண்டை வீரர் தினேஷ் குமார், 30. தேசிய சாம்பியன் ஆன இவர் 2008 ஒலிம்பிக்கில் பங்கேற்றார். 2010 ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்றார். சிறந்த வீரருக்கான அர்ஜுனா விருது வென்றவர்.
ஹரியானாவை சேர்ந்த இவர் பல்வேறு போட்டிகளில் 17 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் வென்றார். 2014ல் இவர் சென்ற கார், லாரியில் மோதி விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். இதன் பின் வாழ்க்கை திசை மாறியது. சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் தந்தை கடன் வாங்கினார். ஏற்கனவே பயிற்சிக்காகவும் கடன் வாங்கி இருந்தார். அரசும் கைவிட்டதால் வேறு வழியில்லாத நிலையில், கடனை அடைக்க தந்தையுடன் சேர்ந்து தள்ளு வண்டியில் ‘குல்பி ஐஸ்’ விற்கிறார்.
இதுகுறித்து தினேஷ் குமார் கூறுகையில்,” காயத்தில் இருந்து மீண்டு முழு உடற்தகுதியில் உள்ளேன். இளம் வீரர்களுக்கு பயிற்சி கொடுத்து சர்வதேச அளவில் சிறப்பானவர்களை உருவாக்க முடியும். எனது கடனை அடைக்க உதவி செய்து, நிலையான அரசு வேலை தர வேண்டும்,” என்றார்.