- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

குமரி அனந்தனுக்கு உடல்நலக்குறைவு
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காந்தி பேரவை அமைப்பின் தலைவருமான குமரி அனந்தன் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காந்தி பேரவை அமைப்பின் தலைவருமான குமரி அனந்தன் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து குமரி அனந்தன் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடல்நலம் தேறும் வரையில் பிரசாரத்தில் பங்கேற்க வேண்டாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ‘உடல்நலம் தேறியதும் மீண்டும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவேன்’ என குமரி அனந்தன் தெரிவித்தார்.