குடியரசுத் தலைவர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது; 20-ம் தேதி முடிவு தெரியும்

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) காலை சரியாக 10 மணிக்குத் தொடங்கியது.

தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 25-ம் தேதியு டன் முடிவடைகிறது. இதையடுத்து நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மக்களவைத் தலைவர் மீரா குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஆச்சரியமூட்டும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அதே அறையின் டேபிள் எண் 6-ல் இருந்து வாக்களிக்கின்றனர்.