கிழக்கு மாகாண மக்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாரிய துரோகம் விளைவித்துள்ளது கண்டனம் தெரிவிக்கும் கருணா

கிழக்கு மாகாணசபையில் உள்ள பெரும்பான்மை அதிகாரத்தை கொண்டு தமிழ்பேசும் ஒருவரை முதலமைச்சர் ஆக்கும் வாய்ப்புக்கள் அதிகமாக இருந்தன. ஆனாலும் ஜனாதிபதி மைத்திரியினதும் பிரதமர் ரணிலினதும் வேண்டுகொளையும் நெருக்குவாரத்தையும் கருத்திற்கொண்டு முதலமைச்சர்பதவியை முஸ்லிம் ஒருவருக்கு விட்டுக்கொடுத்துவிட்டது. இந்த வகையில் கிழக்கிலும் தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாரிய துரோகம் இழைத்துள்ளது என்றே கூறவேண்டும். ஏனவே காலம் தாழ்த்திச் சென்றாலும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடி தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான ஒரு போராட்;டத்தை நடத்துவதோடு மட்டுமல்லாது, கிழக்;கு மாகாண சபையை கைப்பற்ற வேண்டும்.

இவ்வாறு கருணா என்று அழைக்கப்படுபவரும் முன்னாள் மகிந்த அரசில் உதவி அமைச்சராக இருந்தவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆவரது கட்சியான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்னும் அமைப்பின் மத்திய குழுக் கூட்டம் கடந்த திங்கட்கிழமையன்று மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்றது. ஆங்கு உரையாற்றும் போதே கருணா மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆவர் அங்கு மேலும் கூறியதாவது:-
தற்போதைய நல்லாட்சி என்பது தள்ளாடும் நிலையிலேயே உள்ளது. ஊழலும் நிர்வாகச் சீர்கேடு ஆகியவை தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன. ஏனவே இந்த அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவையும் அதற்கு துணைபோகும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வழங்கும் ஆதரவையும் கிழக்கு மாகாண மக்கள் விலக்க வேண்டும். ஆவர்கள் உங்கள் வாசல்களுக்கு வாக்கு கேட்டு வரும்போது, அவர்களிடம் கேள்விக்கணைகளை விடுக்க வேண்டும்.
ஏதிர்வரும் தேர்தல்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்;பை மக்கள் தங்கள்; அரசியல் பலத்தால் துரத்தி அடிக்க வேண்டும். ஆப்;போதுதான் எமது மக்களுக்கு விடிவு கிடைக்கும். கிழக்கு மாகாணத்தை தமிழ்பேசும் ஒருவரே முதலமைச்சராக இருந்து தலைமை தாங்க முடியும். பேரும்பான்மையினராக தமிழ் மக்கள் ஆகிய நாம் இருக்கும் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்து சோரம் போயுள்ளது. ஏனவேதான் நஸீர் என்னும் முஸ்லிம் ஒருவர்n எமது மக்களுக்கு தலைமை தாங்குகின்றார். இதை நாங்கள் எற்கமாட்டோம். ஆனால் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விட்டுக்கொடுத்து விட்டு அரசாங்கத்திடம் இருந்து தனித்தனியாக சலுகைகளைப் பெற்றுக்கொண்டு? உல்லாச வாழ்க்கை வாழுகின்றது. இதனை கிழக்கு மாகாண தமிழ் மக்கள் நன்கு உணரவேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களே மிக அதிகளவில் வாழ்கின்றார்கள். இங்கு தமிழ் மக்கள் 32 சதவீதமும் முஸ்லிம் மக்கள் 29 சதவீதமும் சிங்களவர்கள் 22 சதவீதமும் வாழுகின்றார்கள். ஏனவே நாம் எமது வாழும் உரிமைகளையும் சலுகைகளை அனுபவிக்கும் சந்தர்ப்பத்தையும் தவறிவிட்டுள்ளோம். இதற்கெல்லாம் காரணம் தமிழ்தேசிய கூட்டமைப்பே ஆகம்.

இதேவேளை வடக்கு மாகாணத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சிறந்த தலைமைத்துவத்தை மக்களுக்கு வழங்க முடியாமல் உள்ளது. ஆதன் தலைiமைப் பீடமும் குழப்ப நலையில் உள்ளதால் அங்கு மாகாண சபையிலும் குழப்ப நிலை தோன்றியுள்ளது. ஏனவே வடக்கு மாகாண மக்கள் சிறந்ததொரு தலைவரை தேர்ந்தெடு;க்க வேண்டும். அப்போதுதான் வடக்கு மாகாண மக்கள் மாகாண சபையின் சிறந்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.