- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்

கிழக்கு ஆப்பிரிக்க மாலவி நாட்டில் 5 மாதங்களிள் 7000 மாணவிகள் கர்ப்பம்
கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மாலவியில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் 5 மாதங்கள் பள்ளிகள் மூடப்பட்ட நேரத்தில் 7000 மாணவிகள் கா்ப்பமாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை தடுக்க உலகில் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கிழக்கு ஆப்பரிக்க நாடான மாலவியிலும் கொரோனா பரவியதைத் தொடர்ந்து அங்கு கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கை அந்நாட்டு அரசு அமல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில் அந்நாட்டு மாணவிகள் 10 முதல் 14 வயதுக்குட்பட்ட 7,000 பேர் கர்ப்பமாகி உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் இளைஞர் சுகாதார சேவை ஒருங்கிணைப்பாளர் பீட்டர் மாலிபா பேசியதாவது, ‘ கடந்த ஐந்து மாத காலமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நேரத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இந்த சூழலில் 7,000க்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளனர். பாலோம்பே நகரில் மட்டும் 1000 மாணவிகளும், மிசம்பா மற்றும் நசான்ஜே நகரில் 724 மாணவிகளும் கர்ப்பம் அடைந்துள்ளனர்.’ இவ்வாறு தெரிவித்தார்.
இதுகுறித்து அந்நாட்டின் கல்வித் துறை இயக்குனர் பெனிடிக்டோ கோன்டோவே தெரிவித்த தாவது, ‘கொரோனா பரவல் நேரத்தில் இளம் பெண்கள் வாழ்க்கை சீரழிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இது குறித்து பேசிய கென்யா நாட்டு அதிகாரிகள், ‘ ஊரடங்கின் போது கடந்த 3 மாத காலத்தில் மட்டும் கென்யாவில் மட்டும் 1,50,000 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளனர். இது சராசரி எண்ணிக்கையை விட 40 சதவீதம் அதிகமாகும்’ இவ்வாறு தெரிவித்தனர்.