கிளிநொச்சியில் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு புரிந்த நபருக்கு பத்தாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்

கிளிநொச்சியில் 12 வயது சிறு மியை பாலியல் வன்புணர்வு புரிந்த நபருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும், 2 இலட்சம் ரூபாய் நட்டஈடும் விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்க வாசகர் இளஞ்செழியன்தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு 07ஆம் மாதம் கிளிநொச்சியில் 12 வயதும் 6 மாதம் நிரம்பிய பருவமடையாத சிறுமயை கடத்தி சென்று தேவாலயத்திற்கு பின்னால் உள்ள வீதியில் வைத்து பாலியல் வல்லுறவு புரிந்தமை தொடர்பான வழக்கானது கடந்த செவ்வாய்கிழமையன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே நீதிபதி இத்தீர்ப்பை வழங்கினார்.

குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றில் சாட்சியமளித்திருந்ததுடன் எதிரியும் தன்மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்தார். அத்துடன் தாம் மது போதையில் இருந்த போதே இச் சம்பவம் நடந்ததாகவும் சாட்சியமளித்திருந்தார்.
எதிரிதரப்பு சட்டத்தரணி குறித்த நபர் திருமணம் முடித்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் நிலையில் அவருக்கு குறைந்த தண் டனை வழங்க வேண்டும் என கருணை விண்ணப்பம் செய்தார்.
இதன்போது அரச சட்டவாதி நாகரட்ணம் நிசாந்த் குறித்த குற்றச் செயலானது பாரதுரமான குற்றச் செயல் எனவும் அதற்கு ஆகக் கூடியது 20 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்ட ணையும் குறைந்தது 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்க சட்டம் பரிந்துரைப்பதாக குறிப்பிட்டார்.

இதனையடுத்து குறித்த சிறுமியை கட த்தி சென்றமைக்காக 2 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனையும், பாலியல் வன்புண ர்வு புரிந்தமைக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் விதித்ததுடன் இர ண்டு தண்டனையும் ஏக காலத்தில் அனுப விக்கவும் அனுமதியளித்தார்.மேலும் இக் குற்றங்களுக்கு 10ஆயிரம் ரூபாய் தண்டப் பணமும் அதனை கட்டத்தவ றின் 6 மாத கடூழிய சிறைத் தண்டனையும் 2 இலட்சம் ரூபாய் நட்டஈடும் கட்டத்தவறின் 2 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.