- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு

கிருபானந்த வாரியார் நினைவு தினக் கவிதை
ஆன்மீகப் பணிகளே அன்றாட தவமென
அகிலத்தை ஆண்டிடும் அன்பான அருளாற்றல்!
தேன்சுவை பொழிவினை தித்திக்கும் தமிழாலே
தினந்தோறும் அருளிய தெய்வீக பேச்சாற்றல்!
ஏனென்ற கேள்விக்கும் ஏற்றதொரு விளக்கத்தை
எளியதொரு நடையிலே இயம்பிய பேராற்றல்!
வான்வழி பயணத்தில் வடிவேலை வணங்கிட
வானுலகு சென்றது வாரியார் சிறப்பாற்றல்!
நாயன்மார் வரிசையில் நற்பணி செம்மலாய்
நாளுமே தெய்வீகம் நடத்திய அருளரசு! .
தூயதொரு சிந்தனையை தூண்டிட மக்களிடம்
தூதுவனாய் வந்திங்கு துவங்கிய போர்முரசு!
காயமே நிலையில்லை கடந்திடு இவ்வாழ்வை
காட்டினார் ஆன்மீகம் கடவுளின் வழியிலே!
பேயென அலையாமல் பெருமானை போற்றிடு
பெருவாழ்வு கிடைக்குமென பேசினார் புவியிலே!
வேலையதை வணங்குவதே வேலையென கொண்டவர்
வேலவன் புகழ்பாடி வேதமதை கண்டவர்!
சோலையில் பூத்திடும் சுணங்காத மலரானார்
சோதனைகள் வந்திடினும் சுடர்மிகு விளக்கானார்!
பாலைநிலம் என்றாலும் பசுமையாய் மாற்றிடும்
பாடுகின்ற இவர்பாட்டு பசியினை போக்கிடும்!
காலைநேர சூரியனாய் கருத்திலே உதித்திடும்
காலந்தோறும் வாரியார் கருத்துக்கள் நிலைத்திடும்!

-ப.கண்ணன்சேகர்,9894976159.
thanks..