கிரிக்கெட்: இந்தியா கேவலமான தோல்வி

அதிகம் படித்தவை

மோடிக்கு கருப்புகொடி: வைகோவை வரவேற்று பா.ஜ., போஸ்டர் 134

டுவிட்டரில் டிரண்டிங் ஆன “மதுரை தேங்க்ஸ் மோடி” 99

இந்து என்பதால் விமர்சிக்கப்படுகிறேன்: அதிபர் … 94

இந்திய அணிக்கு நியூசி., போலீஸ் ‘எச்சரிக்கை’ 13

கோமா பெண்ணிற்கு குழந்தை; ஆண் நர்ஸ் கைது 11

அதிகம் விமர்சிக்க பட்டவை

காந்தியை சுட்டுவிட்டு கோட்சேவுக்கு மாலை; வீடியோவால் … 201

மோடிக்கு கருப்புகொடி: வைகோவை வரவேற்று பா.ஜ., போஸ்டர் 134

உள்நோக்கத்துடன் சந்தித்த ராகுல்: பரீக்கர் வேதனை 129

ஹாமில்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேவலமாக தோல்வியடைந்தது. 92 ரன்னுக்கு சுருண்ட இந்திய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி 3-0 என தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகள் மோதிய நான்காவது போட்டி ஹாமில்டனில் நடந்தது.

கோஹ்லிக்கு ஓய்வு தரப்பட்டதால், தனது 200வது போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாக களமிறங்கினார். ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் இளம் வீரர் சுப்மன் கில் 19, அறிமுகம் ஆனார். முகமது ஷமிக்குப் பதில் கலீல் அகமது சேர்க்கப்பட்டார். தோனி இன்றும் களமிறங்கவில்லை.

நியூசிலாந்து அணியில் மன்ரோ, பிரேஸ்வெல், இஷ் சோதி, பெர்குசன் நீக்கப்பட்டு ஜிம்மி நீஷம், கிராண்ட்ஹோம், ஆஸ்லே, மாட் ஹென்றி சேர்க்கப்பட்டனர்.

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி துவக்கம் கொடுத்தது. தவான் 13 ரன்னுக்கு பவுல்ட் ‘வேகத்தில்’ சிக்கினார். அடுத்த சில நிமிடங்களில் ரோகித் சர்மாவும் (7) அவுட்டானார். கோஹ்லி இடத்தில் களமிறங்கிய சுப்மன் கில், பவுண்டரி அடித்து தனது சர்வதேச ரன் கணக்கைத் துவக்கினார்.

அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக் இருவரும், கிராண்ட்ஹோம் வீசிய முதல் ஓவரில் ‘டக்’ அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். சுப்மன் கில் (9) ரன் எடுக்க, கேதர் ஜாதவ் (1) ஏமாற்றினார்.

ஒரு கட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்திருந்த இந்திய அணி, அடுத்து 14 ரன் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து பாண்ட்யா 16, குல்தீப் 15 ரன்னுக்கு அவுட்டாகினர். கலீல் அகமதுவும் 5 ரன்னுக்கு போல்டாக இந்திய அணி 30.5 ஓவரில் 92 ரன்னுக்கு சுருண்டது. சகால் அதிகபட்சம் 18 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். நியூசிலாந்து சார்பில் பவுல்ட் 5, கிராண்ட்ஹோம் 3 விக்கெட் சாய்த்தனர்.