கிம்மின் பொத்தானைவிட என் அணு ஆயுத பொத்தான் `பெரியது` `சக்தி வாய்ந்தது`: டிரம்ப்

தன்னுடைய அணு ஆயுத பொத்தான் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் -னிடம் உள்ள பொத்தானைவிட `பெரியது` மற்றும் `அதிக சக்திவாய்ந்தது` என்று
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன் ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @realDonaldTrump

Donald J. Trump

@realDonaldTrump
North Korean Leader Kim Jong Un just stated that the “Nuclear Button is on his desk at all times.” Will someone from his depleted and food starved regime please inform him that I too have a Nuclear Button, but it is a much bigger & more powerful one than his, and my Button works!

பிற்பகல் 7:49 – 2 ஜன., 2018
127,491 127,491 பதில்கள் 145,284 145,284 Retweets 347,293 347,293 விருப்பங்கள்
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை
முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @realDonaldTrump
இந்த வார தொடக்கத்தில் கிம் ஜோங் வட கொரியாவின் அணு ஆயத ஏவுகணையை செலுத்தும் பொத்தான் தன் மேஜையில்தான் எப்போதும் உள்ளது என்று கூறி இருந்தார்.

அணு ஆயுத ஏவுகணைக்கான பொத்தான் என் மேஜையில் உள்ளது: கிம் ஜோங் உன்
இதற்கு பதிலளிக்கும் விதமாக இவ்வாறாக டிரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

மரபுகளை மீறிய ட்ரம்ப்பின் இந்த வார்த்தைகளுக்கு ஏராளமானோர் சமூக ஊடகங்களில் எதிர்வினை ஆற்றி உள்ளனர்.

அணுஆயுதம் என்பது விளையாட்டு பொருள் அல்ல. எங்கள் மேஜையில் அணு ஆயுதத்தை செலுத்தும் பொத்தான் இருக்கிறது என்று தற்பெருமை கொள்ளாதீர்கள் என்ற தொனியில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்கள்.