காஸா எல்லையில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: பாலஸ்தீனர் ஒருவர் பலி

காஸா எல்லையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீனர் ஒருவர் பலியானார்.

இதுகுறித்து காசா சுகாதார அமைச்சகம் தரப்பில், “காஸா – இஸ்ரேல் எல்லைப்புறத்தில் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் பாலஸ்தீன நபர் ஒருவர் பலியாகியிருக்கிறார்” என்று கூறியுள்ளது.

பலியான விவரம் குறித்து பாலஸ்தீன அரசு வெளியிடவில்லை.

பாலஸ்தீன குற்றச்சாட்டு குறித்து இஸ்ரேல், “வான்வழித் தாக்குதல் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்டது” என்று விளக்கம் அளித்துள்ளது.

காசா – இஸ்ரேல் எல்லையில் இஸ்ரேல் – காசா எல்லையோரத்தில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் இஸ்ரேலை எதிர்த்து கடந்த வெள்ளிக்கிழமை பேரணியாகச் சென்றனர்.

அவர்களைக் கலைக்க இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பாலஸ்தீனர்களின் பேரணி வன்முறையாக மாறியது. இதில் 21 பாலஸ்தீனர்கள் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் தொடர்பாக ஐ. நா. சபையின் விசாரணையை இஸ்ரேல் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.