காஷ்மீரில் புதிய நில திருத்த சட்டம்: ஜம்மு தொழிலதிபர்கள் இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி !!

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது சட்டப் பிரிவை மத்திய அரசு, கடந்தாண்டு ரத்து செய்தது. ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் என, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த யூனியன் பிரதேசங்களுக்கான நிலச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிலையில், அவை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று பி.பி.ஐ.ஏ., எனப்படும் தொழிலதிபர்கள் கூட்டமைப்பினர் வெளியிட்டுள்ள செய்தியில், புதிய நில சட்ட திருத்தம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு கூட்டமைப்பு சார்பில் பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் நன்றி. நில திருத்த சட்டத்தால் இரு யூனியன் பிரதேசங்களிலும், பல்வேறு துறைகளில் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறியுள்ளனர்.

முன்னதாக ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டு இருந்ததால், நாட்டின் மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள், இங்கு நிலம் வாங்க முடியாத நிலை இருந்தது. தற்போது நாடு முழுதும் அமலில் உள்ள நிலச் சட்டங்களுடன் பொருந்தும்படி, புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்திய குடிமகன் எவரும், ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன்பிரதேசங்களில், நிலம் வாங்குவதற்கானஅதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.