காவிரி வாரிய கூட்டத்தில் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த ஆலோசனை: மத்திய அரசு

காவிரி மேலாண்மை வாரியத்தை எவ்வாறு அமைக்கலாம் என்பது குறித்து கருத்து தெரிவிக்குமாறு, நான்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

டில்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் கூறுகையில், காவிரி விவகாரத்தில் தீர்ப்பை அமல்படுத்த திட்டம் வகுக்க குழு அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. சுமூக தீர்வு காண திட்டம் வகுக்கப்படும். கோர்ட் உத்தரவை அமல்படுத்துவுதற்கான ஆயத்த

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, 192 டி.எம்.சி., காவிரி நீரை தமிழகத்திற்கு கர்நாடக அரசு வழங்க வேண்டும். இந்த நீரை 177.25 டி.எம்.சி.,யாக குறைத்து, பிப்., 16ல், உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஆறு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது. அது தொடர்பான ஆலோசனை கூட்டம் டில்லியில் இன்று நடந்தது.

இதில் பங்கேற்க தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா மாநில அரசுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கூட்டத்தில், தமிழகம் தரப்பில் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை செயலர் பிரபாகர், காவிரி தொழிற்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியம் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை எவ்வாறு அமைக்கலாம் என மாநில அரசுகள் கருத்து கூற வேண்டும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த என்ன மாதிரியான திட்டங்களை செயல்படுத்தலாம் என அறிக்கை தாக்கல் செய்யுமாறு 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, கர்நாடக மாநில செயலர் ரத்தின பிரபா கூறுகையில், எங்களது முடிவை விரைவில் மத்திய அரசுக்கு தெரிவிப்போம். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த உத்தரவு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் இல்லை எனக்கூறினார்.